பதிவு செய்த நாள்
11 ஆக2015
11:48
ஜெர்மானிய கார் தயாரிப்பு நிறுவனமான, ‘மெர்சிடெஸ் பென்ஸ்’ இந்தியாவில், அடுத்த வாரத்தில், ‘ஏ.எம்.ஜி., 63’ ரக, காரை அறிமுகம் செய்கிறது. இந்த சொகுசு காரில், மெர்சிடெஸ் நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பான, ‘எஸ்’ வகை கார்களை விட, மொத்த எடையை குறைக்கும் வகையில், அதிக அளவில், அலுமினியம் மற்றும் ‘கார்பன் – பைபர்’ பாகங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த புதிய மாடலில், காரின் உட்புறத்தில், சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. வழக்கமாக, மரத்தாலான பயன்பாட்டு பகுதிகள் மாற்றப்பட்டு, ஸ்டைலான, ‘கார்பன் பைபரில்’ அமைக்கப்பட்டு உள்ளன. தோலினால் செய்யப்பட்ட சில உட்புற பாகங்களில், வழக்கமான நிறத்துக்கு பதிலாக, கறுப்பு நிறம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய ரக காரில், 577 குதிரை சக்தி திறனுடைய இன்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது; இது, 4.4 வினாடிகளில், 100 கி.மீ., வேகத்தை எட்டிவிடும் என, அந்நிறுவனம் கூறுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|