பதிவு செய்த நாள்
14 ஆக2015
16:51

மும்பை : இந்திய பங்குசந்தைகள் அதிக எழுச்சியுடன் முடிந்தன. காலைமுதலே ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குசந்தைகளுக்கு இன்று(ஆகஸ்ட் 14ம் தேதி) வௌியான பணவீக்கமும், ஊக்கம் தர பங்குசந்தைகள் அதிக எழுச்சியுடன் முடிந்தன.
இந்தவாரம் துவக்கத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் சரிவை சந்தித்த பங்குசந்தைகள், புதன் அன்று வௌியான சில்லரை வர்த்தக பணவீக்கம் சரிவு மற்றும் தொழில்துறை உற்பத்தி அதிகரித்ததன் விளைவாக, வியாழன் அன்று பங்குசந்தைகள் உயர்ந்தன. ஆனாலும் ரூபாயின் மதிப்பில் காணப்பட்ட சரிவால் பங்குசந்தைகளில் சற்று சுணக்கம் நிலவியது. இந்தசூழலில் இன்று, வௌியான ஜூலை மாதத்திற்கான மொத்த பணவீக்கம் –4.05 ஆக சரிந்தது. இதன்காரணமாக ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை குறைக்கும் என்று அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன்காரணமாக முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கினர். குறிப்பாக வங்கி தொடர்பான பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கினர். இதனால் இன்றைய வர்த்தகம் அதிக ஏற்றத்துடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 517.78 புள்ளிகள் உயர்ந்து 28,067.31 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 162.70 புள்ளிகள் உயர்ந்து 8,518.55ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில், 1795 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 1057 நிறுவன பங்குகள் சரிந்தும், 129 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன. குறிப்பாக ஐசிஐசிஐ., எஸ்பிஐ., ரிலையன்ஸ் மற்றும் ஹெச்டிஎப்சி நிறுவன பங்குகள் அதிக லாபமும், டாக்டர் ரெட்டி, இன்போசிஸ் போன்ற நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|