பதிவு செய்த நாள்
17 ஆக2015
14:36

இந்தியாவில், அதிக அளவில், இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும், ‘ஹீரோ மோட்டார் கார்ப்’ நிறுவனம், இந்த பண்டிகை காலத்தில், இரு புதிய, ‘ஸ்கூட்டர்’ களை அறிமுகப்படுத்த உள்ளது. எனினும், இவற்றின் பெயர்களை, அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல், ரகசியம் காத்து வருகிறது. அனேகமாக, ‘டேஷ்’ மற்றும் ‘டேர்’ என்ற பெயர்களில், ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என, துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.குர்காவன் ஆலையில், ‘டேஷ்’ 110 சி.சி., ஸ்கூட்டரை, ஹீரோ மோட்டார் கார்ப், சில மாதங்களுக்கு முன் உற்பத்தி செய்ய துவங்கி விட்டது. இவற்றில், 8.5 குதிரை சக்தி திறனுடைய, ‘சிங்கிள் சிலிண்டர்’ நான்கு ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்படுகிறது.‘மொபைல், யு.எஸ்.பி., சார்ஜர், பூ ட்லைட், எல்.இ.டி., பின்புற விளக்குகள், டிஜிட்டல் மீட்டர்’ போன்ற பல அம்சங்கள் இருக்கும். ‘டியூப்லெஸ்’ டயர்கள் கூடுதல் சிறப்பு. இது, ‘ஹோண்டா ஆக்டிவா, டி.வி.எஸ்., ஜூபிடர் மற்றும் மஹிந்திரா கட்ஸோ’ வாகனங்களுக்கு போட்டியாக இருக்கும்.இதுபோல், ‘டேர்’ 125 சி.சி., ஸ்கூட்டர், பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டிருக்கும். அது, ‘ஹோண்டா ஆக்டிவா – 125 சி.சி.,’ ஸ்கூட்டருக்கு போட்டியாக இருக்கும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|