பதிவு செய்த நாள்
23 ஆக2015
14:43
மாருதி எர்டிகா கார், புதிய மாற்றங்களுடன், விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன் புதிய தோற்றத்தை, மாருதி சுசூகி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. புதிய மாடலில், வெளிப்புறத்தில் மட்டுமின்றி, உட்புறத்திலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்புறத்தில், ‘கிரில்’ நீளம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. பம்பரில், ‘குரோம்’ கலப்பு அதிகமாகவே உள்ளது. பின்புறத்தில், இரு, ‘டெயில்லேம்ப்’களை இணைக்கும் வகையில், தடிமனான, ‘குரோம் பார்’ பொருத்தப்பட்டு உள்ளது. ‘பூட் லிட்’-ல், ‘டெயில் லேம்ப்’களுக்கு அருகில், கூடுதல், ‘ரிப்ளக்டர்’கள் அமைக்கப்பட்டு உள்ளன.புதிய நிறம், கிளைமேட் கன்ட்ரோல், பொருள் வைக்கும் அறையில் மாற்றம் என, உட்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. மாருதி சுசூகியின், ‘ஸ்மார்ட்பிளே’ தொடுதிரை, ‘இன்போடெயின்மென்ட்’ வசதியும் உண்டு. இதன், சற்று மாற்றியமைக்கப்பட்ட, 1.4 லிட்டர் கே14 பெட்ரோல் மற்றும் டி.டி.ஐ.எஸ்., டீசல் இன்ஜின்கள், அதிக மைலேஜ் பெற உதவும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|