பதிவு செய்த நாள்
25 ஆக2015
14:48
இந்தியாவில், 50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான பைக்குகளுக்கு, வரவேற்பு அதிகம். அந்த வரிசையில், மகிந்திரா நிறுவனம், விரைவில், 'அர்ரோ' பைக்கை அறிமுகம் செய்ய உள்ளது. இது, 'பேசிக் மாடல்' பைக், ஊரக சந்தையை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளது. மகிந்திரா, 'செஞ்சுரோ' பைக்கில் பொருத்தப்பட்டுள்ள, எம்.சி.ஐ.,-5, இன்ஜின், இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, 8.5 குதிரை சக்தி திறனுடையது. நான்கு கியர்கள்; பின்புற, ஷாக் அப்சர்பர், ஐந்து விதங்களில், உயரத்தை மாற்றி அமைக்கலாம். ஹேண்டில் பார் அடக்கமாகவும், இருக்கை சற்று நீளமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்க் கொள்ளளவு, 13.7 லிட்டர். குறைந்த விலை, அதிக மைலேஜ் என்ற அடிப்படையில், தயாராகி இருக்கும் இந்த பைக், அடுத்த மாதம் அறிமுகமாகிறது. விலை, ரூ. 40 ஆயிரத்தில் இருந்து துவங்கும். டி.வி.எஸ்., பஜாஜ் தயாரிப்புகளுக்கு, சவாலாக விளங்கும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|