பதிவு செய்த நாள்
01 செப்2015
11:03

சுற்றுச்சூழலுக்கு உகந்த, பாரத் ஸ்டேஜ் – 4 என்ற பி.எஸ்., – 4 விதிகளின்படி, வர்த்தக வாகனங்களை, டெய்ம்லர் நிறுவனம், உற்பத்தி செய்துள்ளது. அதை அடுத்த மாதத்தில் இருந்து, நாடு முழுவதும் விற்பனை செய்ய உள்ளது. மத்திய அரசு நிர்ணயித்திருக்கும் மாசுக் கட்டுப்பாடு, விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு சோதித்து பார்த்ததில், அது பொருந்தி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பி.எஸ்., – 4 தர, விதிமுறைகளுக்கு உட்பட்ட, அனைத்து வர்த்தக வாகன மாடல்களையும், சென்னையில் உள்ள ஆலையில் தயாரிக்க முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒன்பது டன் முதல், 49 டன் திறனுள்ள வாகனங்களை, விற்பனைக்கு கொண்டு வர தயாராக உள்ளது அந்த நிறுவனம். அடுத்த மாதம் முதல் விற்பனை துவங்கும். சென்னை அருகே ஓரகடத்தில், 4,400 கோடி ரூபாய் செலவில், 400 ஏக்கரில், டெய்ம்லர் வர்த்தக வாகன தொழிற்சாலை அமைந்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|