பதிவு செய்த நாள்
01 செப்2015
16:19

மூன்று ஆண்டுகளாக, வகை வகையான, ‘வெஸ்பா’ ஸ்கூட்டர்களை, அறிமுகப்படுத்தி வரும், ‘பியாஜியோ’ நிறுவனம், ‘வெஸ்பா- எப்1’ என்னும், புதிய தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள மற்றுமொரு, ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது. பொதுவாகவே, வெஸ்பா நிறுவனம், 69 ஆயிரம் ரூபாயில் இருந்து துவங்கும் விலை அதிகமான, ‘பிரீமியம்’ ரக ஸ்கூட்டர் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ‘வெஸ்பா எப்1’ சந்தைக்கு வருகிறது.
வெளிநாடுகளில், தன் ஸ்கூட்டர்களில், ‘பியூவல் இன்ஜக்டர்’களை, பயன்படுத்தி வரும் பியாஜியோ, இந்திய எரிபொருளின் தரம், சர்வதேச தரத்தில் இல்லாததால், இங்கு, இதுவரை, கார்பரேட்டர்களையே பயன்படுத்தி வருகிறது. தற்போது, சில மாற்றங்களை செய்து, புதிய ஸ்கூட்டரில், ‘பியூவல் இன்ஜக்டர்’களை பயன்படுத்தியுள்ளது. அதனால், வாகனத்தின் செயல்பாடும், திறனும் அதிகரிக்கும்.
வெஸ்பா ஸ்கூட்டர் விலை, 69 ஆயிரத்தில் இருந்து துவங்கும். 150 சி.சி., திறன் கொண்ட இந்த புதிய ஸ்கூட்டரின் விலை, 4,000 –5,000 ரூபாய் வரை கூடுதலாக இருக்கலாம்; அறிமுகம் நவம்பரில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|