பதிவு செய்த நாள்
01 செப்2015
16:20

ஒரு காலத்தில், 2 ஸ்ட்ரோக் இன்ஜின் கொண்ட பைக் விற்பனையில், பிரமாதப்படுத்தி வந்த யமகா, இந்தியாவில், 2 ஸ்ட்ரோக் இன்ஜின்கள் தடை செய்யப்பட்ட பிறகு, தொய்வை சந்தித்தது. இருப்பினும், சுதாரித்துக் கொண்டு, 4 ஸ்ட்ரோக் இன்ஜின் கொண்ட பைக் விற்பனையை துவங்கியது. வரவேற்பு, முன்பு போல் இல்லாவிட்டாலும், தனக்கென்று ரசிகர் வட்டத்தை உருவாக்கிவிட்டது.
இருப்பினும், அவற்றின் சில மாடல்கள், விற்பனையில் தேக்கம் அடைவதும், அதை மாற்றிவிட்டு, மீண்டும் புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதுமாக, யமகா, தன் முயற்சிகளை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது சந்தையில் இருக்கும், ‘எஸ்.எஸ்., – 125, எஸ்.இசட்., – ஆர்.எஸ்.இசட்., – ஆர்.ஆர்., ஒய்.பி.ஆர்., – 110, ஒய்.பி.ஆர்., – 125’ ஆகிய மாடல்களை நிறுத்த யமகா திடீர் முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. அதை குறிக்கும் விதமாக, மேற்கண்ட, ஐந்து மாடல்களின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை, யமகா நிறுவனம், நீக்கியுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|