பதிவு செய்த நாள்
01 செப்2015
16:22

‘ஏஸ் எஸ்.சி.வி.,’ என்னும், சிறிய ரக சரக்கு வாகனத்தை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ள டாடா மோட்டர்ஸ் நிறுவனம், சந்தையில், குறிப்பிடத்தக்க அளவுக்கு விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், ‘ஏஸ் மெகா’ சரக்கு வாகனத்தை இப்போது அறிமுகப்படுத்தி உள்ளது. ‘ ‘டாடா ஏஸ்’ குடும்பத்தில் புதிதாக சேர்ந்திருக்கும் இந்த புதிய உறுப்பினரால், நாடு முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான, வர்த்தகர்களின் நன்மதிப்பை பெற முடியும் என, அந்நிறுவனம் உறுதியாக நம்புகிறது.
இதில் பொருத்தப்பட்டுள்ள, 2 சிலிண்டர், 800- சி.சி., டைகார் இன்ஜின், 40 எச்.பி., திறனை தந்து, வாகனத்தின் வேகத்தை கூட்டியுள்ளது. அதனால், மணிக்கு, 90 கி.மீ., வேகத்தில் ‘பறக்க’ முடியும். அதேநேரத்தில், லிட்டருக்கு, 18.5 கி.மீ., மைலேஜ் தரவல்லது.
சிறிய சரக்கு ரக வாகனங்களின் பிரிவில், முன்னணியில் இருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு இந்த புதிய வரவு, மேலும் வலுசேர்க்கும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|