பதிவு செய்த நாள்
01 செப்2015
16:23

ஹுண்டாய் நிறுவனம், ‘ஐ20’ ரக கார்களில், ‘என்’ வரிசை காரை, சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்கிறது. இது, ஸ்போர்ட்ஸ் மாடல் காராக மேம்படுத்தியதுபோல் தோற்றம் அளிக்கிறது. புதிய காரை, ‘பெர்பார்மன்ஸ் பிராண்ட்’ என, ஹுண்டாய் விளம்பரப்படுத்துகிறது.
அதன் தொடர்ச்சியாக, ‘ஐ20 என்’ கார், களம் இறங்கியுள்ளது. இதில், ‘ஐ20’ காரில் உள்ளது போல், 1.4 பெட்ரோல் இன்ஜின் பொருத்தி இருந்தாலும், குதிரை சக்தி திறன் மட்டும், 98.6ல் இருந்து, 114 ஆக, அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்சக்கரங்களில், ‘வென்டிலேட்டட் டிஸ்க் பிரேக்’ – பின்பக்கத்தில், ‘சாலிட் டிஸ்க் பிரேக்’ பொருத்தப்பட்டுள்ளன. மேலும், எலக்ட்ரானிக் முறையில், ‘பிரேக்’கை சூழலுக்கேற்ப கட்டுப்படுத்தும், ‘ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்’ இதில் இருக்கிறது. காரின் ஓட்டத்தை காற்று, பாதிக்காத வகையில், ‘பூட் ஸ்பாய்லர்’களும் பொருத்தப்பட்டுள்ளன. அசத்தலான, ‘ஐ20 என் ஸ்போர்ட்’ இந்திய சந்தைக்கு எப்போது வரும் என்பது பற்றிய தகவல் இல்லை.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|