பதிவு செய்த நாள்
01 செப்2015
16:24

டி.வி.எஸ்., நிறுவன ஸ்கூட்டர்களில், அதிகமாக விற்பனையாகும், ‘டி.வி.எஸ்., ஜூபிட்டர்’ மாடலில், சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் புதிய மாடல், பண்டிகை காலத்துக்காக களம் இறக்கியுள்ளது. ‘டி.விஎஸ்., ஜூபிட்டர் இசட்.எக்ஸ்.,’ என பெயரிடப்பட்டுள்ள, இந்த மாடல், குறுகிய காலத்துக்கு மட்டுமே சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும்.
‘ஜூபிட்டர்’ மாடலில் உள்ளது போல், இதிலும், 110 சி.சி., இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இரு வண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.
உட்புறம் கால் வைக்கும் இடத்தில் பழுப்பு நிறம் இடம்பெற்றுள்ளது. ‘ஸ்கூட்டர் ஆப் தி இயர்’ என்ற வாசகம் முன்புறத்தில் இடம் பெற்றுள்ளது இதன் சிறப்பு. இதில், பொருத்தப்பட்டுள்ள, ‘டியூரா கூல்’ இருக்கை விசேஷமானது. ‘வெயிலில், வாகனத்தை நிறுத்தினால் கூட வெப்பத்தை கிரகித்து, மற்ற வாகனங்களின், ‘சீட்’களை விட, இது குளுமையாக வைத்திருக்கும்’ என, டி.வி.எஸ்., நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|