பதிவு செய்த நாள்
01 செப்2015
16:25

தன் புதிய, சிறிய ரக எஸ்.யு.வி.,யான, ‘டி.யு.வி., 300’ காரின் தோற்றத்தை பகுதி பகுதியாக வெளியிட்ட, மகிந்திரா, அதன் முழுத்தோற்றத்தையும் இப்போது வெளியிட்டுள்ளது. மொத்தமாக பார்க்கும்போது, கொஞ்சம் பூசிய வாகுடன் இருக்கிறது இந்தக் கார்.
சிறிய ரக, எஸ்.யு.வி., கார் தயாரிப்பில், முதல் முறையாக இறங்கி இருக்கும் மகிந்திரா, ‘டி.யு.வி., 300’ வாகனத்தை வரும், 10-ம் தேதி, அறிமுகம் செய்கிறது. இதன் ‘பம்பர்’ பெரிதாக உள்ளது. முன்புற கிரில், ‘குரோம்’ பார்டர்களுடனும், வழக்கமான மகிந்திராவின், ‘எம்’ இலச்சினையுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பின்பக்கம், ‘ஸ்பேர் வீல்’ உள்ளது. பக்கவாட்டு கண்ணாடிகள், சற்று பெரிதாக இருப்பதால், கண்ணாடி வீடு போன்ற தோற்றத்தை தருகிறது. ‘டாப்’ மாடலில் மட்டும், காரின் பக்கவாட்டு, ‘பி – பில்லர்’ கருப்பு நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் சில மாடல்களில் உட்புறத்தில்,‘ டூவல்’ நிறத்தில், உருவாக்கப்பட்டுள்ளது. இது, பார்ப்பதற்கு, பெரிதுபடுத்தப்பட்ட, ‘வேகன் ஆர்’ கார் போல் இருப்பதாகவும், சிலர் கூறுகின்றனர்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|