பதிவு செய்த நாள்
01 செப்2015
16:26

ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனத்தின், வலுவான, ‘ஹங்க்’ பைக், புதிய அம்சங்களுடன் விரைவில், சந்தைக்கு வரவுள்ளது. இதில், தற்போதைய மாடலை விட, பல மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்புறத்தில் உள்ள, ‘கிளஸ்டர்’ இதில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, சிறிய, ‘இண்டிகேட்டர்’ பொருத்தப்பட்டு உள்ளது.
மற்றபடி தோற்றத்தில், சாலையில் தற்போது ஓடிக் கொண்டிருக்கும், ‘ஹங்க்’ பைக்கில் உள்ள அம்சங்களில், பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவில்லை. எனினும், இன்ஜின் திறன், 149.2 சி.சி., என்பதில் இருந்து, சற்று அதிகரிக்க வாய்ப்புண்டு. இது, வெகு விரைவில் சந்தைக்கு வர உள்ளது. ‘ஹார்னெட் 160, கிக்சர் 155, எப்இசட்-எஸ்’ ஆகிய மாடல் பைக்குகளுக்கு கடும் போட்டி அளிக்கும் என, துறை வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|