பதிவு செய்த நாள்
01 செப்2015
16:26

ஹூண்டாய் நிறுவனம், ‘ஐ20, ஐ20 ஆக்டிவ்’ ஆகிய, இரு மாடல் கார்களில், தொடுதிரை, ‘இன்போடெயின்மென்ட்’ வசதியை புகுத்தியுள்ளது. ஹூண்டாய் நிறுவன, ஐ20 கார்கள், நல்ல வரவேற்பு பெற்றிருப்பவை. அவற்றில், ‘ஐ20, ஐ20 ஆக்டிவ்’ ஆகிய, இரண்டு ரக கார்களின், ‘டாப் மாடல்’களில் தொடுதிரை வசதியை, ஹூண்டாய் அறிமுகம் செய்துள்ளது. ஐ20ல், புதிதாக அறிமுமாகும், அஸ்டா (ஓ) மாடலில், ஏழு அங்குல அகலம் கொண்ட, ‘ஆடியோ, விஷுவல் நேவிகேஷன் சிஸ்டம்’ பொருத்தப்பட்டுள்ளது. ‘ஐ20 ஆக்டிவ்’ ரகத்தில், ‘டாப் மாடல்’ ‘எஸ்.எக்ஸ்’ காரில் இதே வசதி புதிதாக ஏற்படுத்தப்படுகிறது.
புதிய வசதியில், யு.எஸ்.பி., மற்றும், ‘ஆக்ஸ்’ ஆடியோ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குரல் மூலம் இடும் கட்டளைகளுக்கேற்ப, ‘இன்போடெயின்மென்ட்’டின் சில அம்சங்கள் செயல்படும். இதுதவிர, ‘ஐ20 ஆக்டிவ்’ ரகத்தில், டாப் மாடலான எஸ்.எக்ஸ்., மாடலில், பெட்ரோல் காரும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|