பதிவு செய்த நாள்
02 செப்2015
10:20

‘செவ்ரோலே’ கார் தயாரிப்பு நிறுவனம், தன் பன்முக பயன்பாட்டு வாகனமான, ‘டிரெயில் பிளேசர்’ காரை, இந்தியாவில் விற்பனை செய்ய ஆயத்தமாகி வருகிறது. இந்த காரில் அதிக மாடல்களை, அறிமுகம் செய்யாமல், ஒரே ஒரு வகையான தயாரிப்பை மட்டும், அறிமுகப்படுத்துகிறது. இது, ‘போர்டு எண்டெவர், மிட்சுபிஷி பெஜேரோ ஸ்போர்ட்’ போன்றவற்றுடன், சந்தையில் மோத வேண்டியிருக்கும். டிரெயில் பிளேசருக்கு போட்டியாக, மற்ற நிறுவனங்கள், ‘போர் வீல் டிரைவ்’ வாகனங்களை, விற்பனை செய்து வரும் நிலையில், ‘டிரெயில் பிளேசர்’ ரகத்தில், ஒரேயொரு வகையை, அதுவும், டூ வீல் டிரைவுடன், செவ்ரோலே களத்தில் இறங்குவது ஆச்சரியமே. இதில், ‘ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்’ மற்றும் டயர் பிடிமானத்துக்கான, ‘டிராக் ஷன் கன்ட்ரோல், பேனிக் பிரேக் அசிஸ்ட்,’ மலை இறங்கும்போது கன்ட்ரோல், அனைவருக்கும், ‘ஏர்பேக்’ போன்ற பல வசதிகள் உள்ளன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|