பதிவு செய்த நாள்
02 செப்2015
14:03

புதுடில்லி : பங்குசந்தைகளில் காணப்படும் சரிவு, ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு போன்றவை முதலீட்டாளர்களுக்கு பெரும் கவலை அளித்துள்ளது. இந்தசூழலில் கடந்த இருதினங்களுக்கு முன்னர் நடப்பு நிதியாண்டின், முதல்காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெளியானது. இதில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தது. இது கடந்தாண்டை காட்டிலும் 0.5 சதவீதம் குறைவாகும்.
இதுப்பற்றி கருத்து தெரிவித்த மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்... நாடு சரியான பொருளாதார வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சில தவிர்க்க முடியாத பிரச்னைகளால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறு சரிவு ஏற்பட்டுள்ளது. நிச்சயமாக நாடு 8 சதவீதம் வளர்ச்சியை எட்டும். தற்போது நாடு, பணவாட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பணவீக்கத்தை காட்டிலும் பணவாட்டத்தை தான் மிகவும் உன்னிப்புடன் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|