பதிவு செய்த நாள்
02 செப்2015
16:04

மும்பை : பங்குசந்தைகளில் இன்று கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளன. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்படும் சுணக்கத்தாலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்ததாலும், கடந்த சில தினங்களாகவே பங்குசந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தின்போதே சரிவுடன் ஆரம்பித்த பங்குசந்தைகள், இறுதியில் சரிவுடனேயே முடிந்தன. முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய வர்த்தகமும் சரிவில் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 242.88 புள்ளிகள் சரிந்து 25,453.56-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 68.65 புள்ளிகள் சரிந்து 7,717-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் 1226 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 1398 நிறுவன பங்குகள் சரிவுடனும், 134 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன. சென்செக்ஸை அளவிட உதவும் நிறுவன பங்குகளில் டிசிஎஸ்., டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், இன்போசிஸ் நிறுவன பங்குகள் லாபமும், பெல், எஸ்பிஐ., மஹிந்திரா அண்ட் மஹிந்திரா என்டிபிசி., மற்றும் ஓஎன்ஜிசி., நிறுவன பங்குகள் சரிவுடனும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|