பதிவு செய்த நாள்
03 செப்2015
14:17
உலகளவில், அதிக மைலேஜ் தரக்கூடிய, ‘ஸ்மார்ட் ஹைப்ரிட்’ வகையைச் சேர்ந்த காரை, நாட்டிலேயே முதல்முறையாக மாருதி சுசூகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ‘ஸ்மார்ட் ஹைப்ரிட் வெஹிகிள் பை சுசூகி’ என பொருள்படும், வகையில், எஸ்.எச்.வி.எஸ்., என, இந்த, ‘சியாஸ்’ வரிசை காருக்கு பெயரிடப்பட்டு உள்ளது. இந்த கார், லிட்டருக்கு, 28.09 கி.மீ., மைலேஜ் தரும் என்று மாருதி சுசூகி நிறுவனம் கூறுகிறது. இந்த காரின் மீதுள்ள அதீத நம்பிக்கையால், கடந்த ஆண்டில் அறிமுகம் செய்திருந்த, ‘ஸ்டாண்டர்ட் மாடல் சியாஸ்’ கார் நிறுத்தப்பட்டுள்ளது. புதிய காரில், மாருதி சுசூகி நிறுவனத்தின் நம்பகமான, 1.3 லிட்டர் டி.டி.ஐ.எஸ்., டீசல் இன்ஜின், பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில், பயன்படுத்தப்படும், ‘ஸ்டார்ட்-ஸ்டாப்’ தொழில் நுட்பம், பிரேக் பிடிக்கும்போது செலவாகக் கூடிய ஆற்றலை சேமித்து, பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ள, பேட்டரியில், ‘சார்ஜ்’ செய்து வைக்கிறது. இதனால், டீசல் செலவு குறைகிறது; வாகனத்துக்கு அதிக சக்தியும் கிடைக்கிறது. டில்லியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார், தமிழகத்திலும் விற்பனையாக துவங்கிவிட்டது; இதன், ஷோரூம் விலை, 8.23 லட்சம் ரூபாயில் இருந்து துவங்குகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|