பதிவு செய்த நாள்
09 செப்2015
10:05

மும்பை : இந்திய பங்குசந்தைகள் இன்று(செப்., 9ம் தேதி) நன்கு ஏற்றத்துடன் துவங்கியுள்ளன. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்படும் முன்னேற்றத்தாலும், ஆசிய பங்குசந்தைகளில் குறிப்பாக சீனா பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்றத்தாலும் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கியுள்ளன. மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சீனாவின் பொருளாதாரத்தை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என மூத்த பொருளாதார நிபுணர் ஜேபி மார்கன் கூறியிருப்பதன் எதிரொலியாகவும் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் காணப்படுகின்றன.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் காலை(9.15மணி) மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 413.96 புள்ளிகள் உயர்ந்து 25,731.83 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 117.85 புள்ளிகள் உயர்ந்து 7,806.10 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|