பதிவு செய்த நாள்
09 செப்2015
11:46

சென்னை : தமிழக அரசின் முக்கிய சாதனையாக கருதப்படும், சர்வதேச முதலீட்டாளர் மாநாடு, சென்னையில் இன்று(செப்., 9ம் தேதி) துவங்கியது. முதல்வர் ஜெயலலிதா மாநாட்டை துவக்கி வைத்தார்.
சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டு நாட்கள் நடக்கிறது. மாநாட்டின் முதல்நாளான இன்று(செப். 9ம் தேதி) காலை 11.00 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா மாநாட்டை துவக்கி வைத்தார். தொடர்ந்து மாநாட்டின் பிரத்யேக லோகோ அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், மத்திய அமைச்சர்கள் பொன் ராதாகிருஷ்ணன், நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டவர்களுடன், தமிழக அமைச்சர்களும், சர்வதேச தொழில் அதிபர்களும் கலந்து கொண்டனர்.
மாநாட்டு வளாகத்தில், தொழில் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில், வேலூர் சிறை பஜார் உட்பட, 94 சிறுதொழில் முனைவோர் மற்றும், 100 பெரு நிறுவனங்களின் அரங்குகள் அமைத்துள்ளன. இதுதவிர, 25 தேசிய மற்றும் சர்வதேச வங்கிகளின் அரங்குகளும் இடம்பெறுகின்றன. தமிழக அரசின் முக்கிய துறைகளும் அரங்குகள் அமைத்துள்ளன. சர்வதேச பெரு நிறுவனங்களுக்காக, ஆட்டோமொபைல், இன்ஜினியரிங், ரசாயனம், கட்டமைப்பு, உணவு, மின்னணு வன்பொருள் உள்ளிட்ட, 12 துறைகளுக்கு அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில், டி.வி.எஸ்., அப்பல்லோ டயர்ஸ், எல் அண்ட் டி, சாம்சங், காமராஜர் துறைமுகம், சி.பி.சி.எல்., சேலம் ஏரோபார்க் டைடல் பார்க், டைடல் பார்க், எச்.சி.எல்., இன்போசிஸ் நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர, உள்கட்டமைப்பு, ஜவுளி, வேளாண், திறன் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட, ஒன்பது சிறு, குறு, நிறுவனங்களுக்கான துறைகள் சார்பிலும், அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டு நாட்கள் நடக்கும் இம்மாநாட்டின் மூலம் சுமார் ரூ. 1 லட்சம் கோடி முதலீடு திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|