பதிவு செய்த நாள்
09 செப்2015
12:12

சென்னை : சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தகமையத்தில், சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு இன்று(செப்., 9ம் தேதி) துவங்கியது. மாநாட்டை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். மாநாட்டில் பேசிய ஹெச்சிஎல்., நிறுவனர் ஷிவ் நாடார்...
நான் தமிழகத்தை சேர்ந்தவன். இந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னை அழைத்தது கவுரவமாக கருதுகிறேன். தமிழகம் தான் எனது சொந்த ஊர். ஹெச்சிஎல்., நிறுவனம் தமிழகத்தில் ரூ.6 ஆயிரம் கோடி முதலீடு செய்திருக்கிறது. சென்னை மற்றும் கோவையில் எங்களது நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. பணித்திறனுக்கு ஏற்ற இடமாக சென்னை திகழ்கிறது. ஹெச்சிஎல்., நிறுவனம் அடுத்தப்படியாக மதுரை மற்றும் நெல்லை மாவட்டத்தில் மென்பொருள் மேம்பாட்டு மையம் அமைக்க முடிவு செய்துள்ளது. மேலும் எங்களது நிறுவனம் அடுத்த ஐந்தாண்டுகளில் சுமார் ரூ.6 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு ஷிவ் நாடார் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|