பதிவு செய்த நாள்
09 செப்2015
12:30

சென்னை : சென்னை - பெங்களூரு இடையே தொழிற்பாதை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது மத்திய வர்த்தகதுறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில்... இப்படியொரு மாநாட்டை ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள். முதலீ்ட்டாளர்கள் ஈர்க்க நடவடிக்கை எடுத்து வரும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அந்நிய நேரடி முதலீட்டை அதிகம் பெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது. அந்நிய முதலீட்டை கவருவதில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது.
வாகனம், பொறியல், தோல், ஜவுளி துறையில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மகாராஷ்டிரா, டில்லிக்கு அடுத்தப்படியாக முதலீட்டாளர்கள் அதிகம் கவருவது தமிழகம் தான். இந்தியாவில் முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடம்
ஒற்றை சாளர முறை ஏற்கனவே தமிழகத்தில் செயல்படுகிறது. தொழில் தொடங்குவதற்கு நடைமுறைகளை எளிதாக்குவது நல்லது. தொழில்கடன் துவங்க முத்ரா வங்கி துவக்கப்பட்டுள்ளது. மேக் இந்தியா திட்டத்தின் கீழ் 25 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வளர்ச்சிக்கு வித்திடப்பட்டுள்ளது. ஓசூரில் தொழில் மையம் அமைக்க விரைவில் ஒப்புதல் வழங்கப்படும். சென்னை - பெங்களூரு இடையே தொழிற்பாதை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|