தங்கம் இன்று(செப்.,10) மாலை நிலவரம் சவரனுக்கு ரூ.200 சரிவுதங்கம் இன்று(செப்.,10) மாலை நிலவரம் சவரனுக்கு ரூ.200 சரிவு ... ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு - உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஜெ., பேச்சு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு - உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஜெ., பேச்சு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வித்தியாசமான ‘தார்!’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2015
12:01

‘‘பழைய காலத்து திரைப்படங்களில், ஹீரோவை, வில்லன் துரத்த, ஜீப்கள் தான் அதிகம் பயன்படும். இதைப் பார்ப்பதற்கே. ரசிகர்கள் பட்டாளம் தனி. இந்த ஜீப் தான், எனக்கு மிகப்பெரிய ரோல் மாடல்,’’ என்கிறார், கோவை வடவள்ளியை சேர்ந்த கோபால். இவரை, ‘ஜீப் கோபால்’ என்றால் தான், இப்பகுதியினருக்கு தெரிகிறது.
தார் ஜீப்
ஜீப்களின் வித்தை தெரிந்த இவர், ‘வின்னர்’ திரைப்படத்தில், பிரசாந்த் வரும் ஜீப்பையும், ‘தசாவதாரம்’ திரைப்படத்தில், வில்லன் கமலஹாசன் வரும் ஜீப்பையும் உருவாக்கி கொடுத்தவர் என்ற தனி சிறப்பு பெற்றவர். இன்னும் சில திரைப்படங்களும் இதில் அடங்கும். தற்போது, புது விதமாக, தார் ஜீப்பை உருமாற்றிக் கொடுத்து பெயர் பெற்றுள்ளார்.
வழக்கமாக வரும் தார் ஜீப்பை, கோவையைச் சேர்ந்த ‘ஆர்.ஏ., கஸ்டம்ஸ்’ நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, 2010ம் ஆண்டு மஹிந்திரா நிறுவனத்தின் வெளியீடான, ‘தார் டி.ஐ.,’ ஜீப்பில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
முன்பக்க ஆப்ரோடு பம்பர் உடன் எல்.இ.டி., விளக்குகள், மூன்று டன் வாகனங்களை இழுத்து வரும் வகையில் விஞ்ச், எல்.இ.டி., முகப்பு விளக்குகள், சன்ரூப் உடன் பைபர் மேற்கூரை, ஆற்றில் வாகனங்கள் போகும் போது, இயக்கத்தை இழந்து விடாமல் இருக்க, பில்டருடன் இணைக்கப்பட்ட, ‘ஸ்டார்கிள் கிட், யாருடைய உதவியும் இன்றி, பழுதான சக்கரங்களை மாற்றும் வகையில் திறன் வாய்ந்த ஜாக்கி, காலநிலை மாறும் போது, வாகனங்களை இயக்குவதில் தடை வந்து விடக்கூடாது என்பதற்காக, மேற்கூரையில், 50 அங்குலம் கொண்ட, எல்.இ.டி., விளக்குகள் பொருத்தியுள்ளார்.
வாகனத்தின் உடற்கட்டை விட்டு வெளியே வரும் வகையில், 32 அங்குலம் ட்யூப்லெஸ் சக்கரம், இருக்கைகளை முன்பக்க இருக்கைகளாக கைப்பிடியுடன் மாற்றி, மூன்று, ‘டிவி’க்களையும் இணைத்துள்ளார். வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட, ‘சிக்கின்ஸ்’ வர்ணத்தை பூசி மெருகேற்றியுள்ளார். வாகனத்தின் ஆன்ரோடு மதிப்பு, 7.70 லட்சம் ரூபாயாக இருந்தாலும், இவர் வாகனத்தை மாற்றியமைப்பதற்கு, 7.50 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளார். இதற்கு, ‘ஜி ஸ்போர்ட்’ என்று பெயர் வைத்துள்ளார். இரண்டாவது மாடலுக்கு, சென்னை பென்ஸ் கிளப் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தார் சி.ஆர்.டி., ஜீப்பில் மாறுதல் கொண்டு வந்துள்ளார். மஹிந்திரா சார்பில், 2010ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது இந்த வாகனம். வாகனத்தின் முன்பக்கம், 6 ஆடி ஆப்ரோடு ஹெவி டியூட்டி பம்பர், எல்.இ.டி., விளக்குகள், நான்கரை டன் வாகனத்தை இழுத்து செல்லும் வகையில், திறன் வாய்ந்த வின்ச், ஆறடி கொண்ட கார்பன் பைபர் ஆன்டெனா பொருத்தியுள்ளார்.
வாட்டர் யூஸ் கூலண்ட்
வனப்பகுதியில் செல்லும் போது, சிக்னல் கிடைக்காமல் போகக் கூடாது என்பதற்காக வித்தியாசமான அமைப்பு இந்த ஆன்டெனா. பார்முலா 3 வாகனங்களில் பயன்படுத்தப்படும் வாட்டர் யூஸ் கூலண்ட் பயன்படுத்தியுள்ளார். 40 டிகிரி 350 டிகிரி பாரன்ஹீட்டில், வாகனத்தின் என்ஜின் சூடாக இருந்தாலும், என்ஜினுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாதாம்.
வாகனத்தின் இரு பக்கமும், ஹெவி டியூட்டி ராக் ஸ்லைடர் பயன்படுத்தியுள்ளார். ஏனென்றால், வாகனத்தின் இருபுறமும் பாறைகள் மோதினாலும், சேதாரம் ஆகாதாம். இந்த வாகனத்திலும், வீடியோ அம்சங்கள், நான்கு முன் பக்க இருக்கைகள் என, வாகனத்தின் மதிப்பு, 9.55 லட்சம் ரூபாயாக இருந்தாலும், மாற்றியமைக்க, 12 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார். இந்த வாகனத்துக்கு, ‘வாரியர்ஸ்’ என்று பெயர் வைத்துள்ளார்.
இதுகுறித்து கோபால் கூறுகையில், ‘‘இந்தியாவிலேயே முதன் முறையாக, தார் ஜீப்பில், மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். வாகனத்தின் உடற்கூட்டை மாற்றியமைக்காமல், மற்ற உபகரணங்களை மட்டுமே மாற்றியமைத்துள்ளேன். வாகனப் பிரியர்களுக்கு, இது சிறந்த அனுபவமாக இருக்கும்,’’ என்றார்.
விவரங்களுக்கு: 98945 99940.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)