பதிவு செய்த நாள்
13 செப்2015
14:28
மாருதி சுசூகி நிறுவனம், பண்டிகை காலத்தை முன்னிட்டு, ‘அவான்ஸ்’ என்ற பெயரில், ‘வேகன் ஆர்’ காரின் குறுகிய கால சிறப்பு விற்பனையை துவங்கியுள்ளது. ‘வேகன் ஆர் அவான்ஸ்’ கார், எல்.எக்ஸ்.ஐ., பெட்ரோல் மற்றும் எல்.எக்ஸ்.ஐ., சி.என்.ஜி., என, இரண்டு ரகங்களில் விற்பனைக்கு வந்துள்ளன; இவற்றின் துவக்க விலை, 4.3 லட்சம் மற்றும், 4.84 லட்சம் ரூபாய். சிறப்பு விற்பனை காரின் புறத்தோற்றத்தில், சில ஸ்டைலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காரின் மேற்கூரையில், ‘ரூப்ரெயில், ஸ்பாய்லர்’ ஆகியவை இடம் பெற்றுள்ளன.உட்புறத்தில், இரு கலர்களில், ‘டேஷ்போர்ட், பிரீமியம் சீட் கவர், புளூடூத்துடன் கூடிய டபுள் டின் ஸ்டீரியோ, சென்ட்ரல் லாக்கிங், ரிமோட் மூலம் கதவு திறக்கும், கீலெஸ் என்ட்ரி’ என, பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கார், மூன்று நிறங்களில் கிடைக்கும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|