பதிவு செய்த நாள்
13 செப்2015
14:39
பண்டிகை காலத்தில், புதிய பொருட்கள் வாங்க மக்கள் விரும்புவர். அதை பயன்படுத்தி, விற்பனையை அதிகரிப்பதற்காக, புதிய மாடல் கார்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ‘ரெனோ’ நிறுவனம், புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளதோடு, தங்கள் நிறுவன தயாரிப்புகளுக்கு, 20 ஆயிரம் ரூபாய் முதல், 5 லட்சம் ரூபாய் வரை, விலைச் சலுகையையும் அறிவித்துள்ளது. அதனால், இந்நிறுவனத்தின் சிறியரக காரான, ‘பல்ஸ்,’ 20 ஆயிரம் ரூபாயில் இருந்து, 60 ஆயிரம் ரூபாய் வரை, விலை குறைவாக சில டீலர்களால் விற்கப்படுகிறது. இதில், ‘எக்ஸ்சேஞ் போனஸ்,’ இன்சூரன்ஸ் சலுகை போன்றவை அடக்கம். அதேபோல, 45 ஆயிரம் ரூபாய் முதல், 2 லட்சம் ரூபாய் வரையிலான, தள்ளுபடி விலையில், ‘ஸ்கேலா’ கார் விற்கப்படுகிறது. ‘செடான்’ ரக காரான ‘புளூயன்ஸ்,’ 2.75 லட்சம் வரை விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், ‘டஸ்டர்’ மாடலின் விலையையும், டீலர்கள் குறைத்துள்ளனர். புதுவரவான, ‘லாட்ஜி,’ 40 ஆயிரம் வரை, விலைச் சலுகையில் கிடைக்கிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|