பதிவு செய்த நாள்
13 செப்2015
14:39
ஆடி கார் தயாரிப்பு நிறுவனம், சமீபத்தில், ‘ஏ6 மேட்ரிக்ஸ்’ என்ற டீசல் ரக காரினை அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அதன் பெட்ரோல் மாடலான, ‘ஏ6 35 டி.எப்.எஸ்.ஐ.,’ அறிமுகப்படுத்தியுள்ளது. டில்லி மற்றும் மும்பையில், இதன், ‘எக்ஸ் ஷோரூம்’ விலை, 45.90 லட்சம் ரூபாய். இந்த புதிய காரில், ‘1.8 லிட்டர் டர்போசார்ஜ்’ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதுபற்றி, ஆடி நிறுவனத்தினர் கூறுகையில், ‘இதில், பெட்ரோல் சேமிப்பு திறன், 12.7 சதவீதமும், செயல்படும் திறன், 5 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது’ என்கின்றனர். இதில், டீசல் மாடலில் உள்ளதை விட, ‘பம்பர்’ மற்றும் ‘கிரில்’ ஆகியவை, மாற்றியமைக்கப்பட்டு உள்ளன. முன் இருக்கைகளை, பொத்தானை அழுத்தி, ‘அட்ஜஸ்ட்’ செய்யலாம். 7 ‘ஆட்டோமேட்டிக் கியர்’கள், நான்குவித ‘கிளைமேட் கன்ட்ரோல்,’ கரடுமுரடான சாலைகளை எளிதில் கடக்க உதவும், ‘ஆடி டிரைவ்’ வசதிகள் உள்ளன. இதில், அடுத்த தலைமுறை, ‘மாடுலர் இன்போடெயின்மென்ட்’ தொடுதிரை வசதியும் உள்ளது. லிட்டருக்கு, 15.6 கி.மீ. மைலேஜ் தரக்கூடியது. எட்டு இருக்கைகளிலும், ‘ஏர் பேக்’ பொருத்தப்பட்டிருப்பது கூடுதல் பாதுகாப்பு.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|