பதிவு செய்த நாள்
16 செப்2015
10:56
மொபைல் போன்களின் எண்ணிக்கை பெருகப் பெருக, கால் டாக்சி சந்தையும் வேகமாக வளர்கிறது. இந்த நிதியாண்டில் மட்டும், 20 லட்சம் வாகனங்கள், டாக்சி மற்றும், ‘கேப்’ சேவைகளில் நுழைந்துள்ளன. இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், அந்த சந்தையில், குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்க, ‘ரெனோ’ கார் நிறுவனம் முடிவெடுத்து இருக்கிறது.
இந்த நிறுவனம் ஏப்ரல் மாதத்தில், ஏழு – எட்டு இருக்கைகளை கொண்ட, ‘லாட்ஜி’ என, பெயரிடப்பட்ட பன்முக பயன்பாட்டு வாகனத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால், விலை அதிகமான அதன், ‘டாப்’ மாடலான, ஆர்.எக்ஸ்.இசட்.,டில் மட்டும், ஏழு இருக்கைகள் பொருத்தப்பட்டு இருந்தன.
அதனால், எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை ஆகவில்லை. வரிச்சலுகையும் கிடைக்கவில்லை. அதனால், ஏழு சீட்டுகள் பொருத்திய, விலை குறைவான, ‘லாட்ஜி’ வாகனத்தை, டாக்சி சந்தைக்காக உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதில், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கும். இதன் குதிரை சக்தி, சற்று குறைவாக இருக்கும். இந்த புதிய வாகனம் அறிமுகம் ஆனால், டொயோட்டா நிறுவனத்தின், ‘இன்னோவா’வுக்கு போட்டியாக அமையும். டில்லியில், இதன் எக்ஸ் ஷோரூம் விலை, 8.29 லட்சம் ரூபாயில் இருந்து, 11 லட்சத்துக்குள் இருக்கும் என, கணிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|