பதிவு செய்த நாள்
16 செப்2015
10:57
சூப்பர் பைக் தயாரிப்பில் முன்னணியில் உள்ள, ‘டுகாட்டி’ நிறுவனம், ‘மான்ஸ்டர் 1200 ஆர்’ என்று, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய மாடலை, சமீபத்தில் காட்சிப்படுத்தி உள்ளது. ஜெர்மனியின் பிராங்கபர்ட் நகரில் நடந்த கண்காட்சியில், இந்த பைக், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்கு முந்தைய தயாரிப்பான, ‘மான்ஸ்டர் 1200 எஸ்’ பைக்கை விட, புதிய, 1200 சி.சி., பைக்கில், இன்ஜின் திறன், 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதுதான், டுகாட்டி தயாரிப்புகளிலேயே, மிகவும் சக்தி வாய்ந்த பைக் என்பதால், சூப்பர் பைக் பிரியர்களின் கவனம், இதன் மேல் பதிந்துள்ளது. இந்த பைக்கின் முன்புற, ‘போர்க்’ தேவைக்கு ஏற்ப, ‘அட்ஜஸ்ட்’ செய்யக் கூடியது. வேகமாக போகும்போது, ‘ஹேண்டில் பார்’ உதறுவதை தடுக்கும், ‘ஸ்டீயரிங் டேம்பர்’ கருவி பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|