பதிவு செய்த நாள்
18 செப்2015
12:11

வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட, ‘டைகுவான்’ என்று பெயரிடப்பட்ட எஸ்.யு.வி., வாகனத்தின் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. இப்போது ஓடும், ‘டைகுவான்’ வாகனத்திலிருந்து, பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது, முந்தைய வாகனத்தை விட, 60 மி.மீ., நீளம் அதிகம்; 30 மி.மீ., அகலம் கூடுதலாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதன், ‘வீல் பேஸ்’ 77 மி.மீ., அதிகரிக்கப்பட்டு இருப்பதால், காரின் உட்புறம் சற்று விசாலமாக இருக்கிறது; பின்பக்கம் உள்ள, மடக்கத்தக்க இருக்கையில் அமர்ந்திருப்பவரின் முழங்காலுக்கும், முன்புற இருக்கைக்கும் அதிக இடைவெளி கிடைக்கிறது.
இதில், 1.6 லிட்டர் டீசல் மற்றும், 2 லிட்டர் டீசல் மற்றும், 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும், 2 லிட்டர் டர்போ சார்ஜ் என, நான்கு வித இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் விரைவில் அறிமுகமாக இருக்கும், ‘டைகுவான்’ வாகனத்தில், 2 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்படும் எனத் தெரிகிறது. அதன் திறன், 187 பி.எச்.பி., ஆகும். இப்போதைக்கு, ஐந்து இருக்கைகளுடன் அறிமுகமானாலும், ஏழு இருக்கைகள் கொண்ட மாடல், விரைவில் வெளிவரும் என தெரிகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|