பதிவு செய்த நாள்
18 செப்2015
12:13

சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார், தன் சகோதர நிறுவனமான ‘லேண்ட்ரோவர்’ நிறுவனத்தை பின்பற்றி, முதல் முறையாக, எஸ்.யு.வி., வாகன உற்பத்தியை துவக்கியுள்ளது. என்ன தான் பிரபல பிராண்டாக இருந்தாலும், எஸ்.யு.வி., வாகன தயாரிப்பு இல்லாதது ஒரு குறையாக இருந்தது. இப்போது, அதைப் போக்கும் விதமாக, ‘எப் – பேஸ்’ எஸ்.யு.வி., வாகனத்தை, ஜாகுவார் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன், முன்புற அடிபாகம் தாழ்வாக இருப்பது போல் காணப்பட்டாலும், ‘கிரவுண்ட் கிளியரன்ஸ்’ மிக அதிகம் (213 மி.மீ.,) சக்கரங்கள், எந்த அளவுக்கு கடைக்கோடிக்கு தள்ள முடியுமோ அந்த அளவுக்கு தள்ளி பொருத்தப்பட்டுள்ளன. இதன் புறத்தோற்றம் மற்றும் பின்புறத்தில் உள்ள, ‘ஸ்பாயிலர்’ போன்றவை, ஸ்போர்ட்ஸ் கார் போன்ற தோற்றத்தை தருகிறது. காரின் முன்பக்கத்திலும், ‘கிரில், ஏர்டேம்’ போன்றவை விசாலமாக அமைக்கப்பட்டிருப்பது எடுப்பான தோற்றத்தை தருகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|