பதிவு செய்த நாள்
18 செப்2015
16:37

மும்பை : அமெரிக்க பெடரல் வங்கியின் அறிவிப்பால் பங்குசந்தைகள் இன்று(செப்., 18ம் தேதி) ஏற்றத்துடன் முடிந்தன. வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என அமெரிக்க பெடரல் வங்கி அறிவித்தன் எதிரொலியாக உலகளவில் பங்குசந்தைகள் ஏற்றம் கண்டன. இந்திய பங்குசந்தைகளும் ஏற்றம் கண்டன. காலையில் 300 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்த சென்செக்ஸ் ஒருக்கட்டத்தில் 450 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்டன. நிப்டியும் 8000 புள்ளிகளை தாண்டியது. இருப்பினும் வர்த்தகம் முடியும் தருவாயில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க தொடங்கியதால் சற்று சரிந்தது, இருப்பினும் சென்செக்ஸ் 255 புள்ளிகளும், நிப்டி 83 புள்ளிகளும் ஏற்றத்துடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 254.94 புள்ளிகள் உயர்ந்து 26,218.91-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 82.75 புள்ளிகள் உயர்ந்து 7,981.90-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் 1693 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 924 நிறுவன பங்குகள் சரிந்தும், 118 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன. முக்கிய நிறுவன பங்குகளில் ஆக்சிஸ் வங்கி, ஓஎன்ஜிசி., சன் பார்மா, எச்டிஎப்சி., உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபம் பெற்றன. டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, பெல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|