பதிவு செய்த நாள்
19 செப்2015
15:27
சிறிய ரக கார்களில், சமீபகாலங்களில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது ரெனோ நிறுவனத்தின், ‘க்விட்.’ இது, போட்டி நிறுவனங்களின் சிறிய கார்களை விட, பல புதிய அம்சங்களை கொண்டிருப்பதால், நல்ல வரவேற்பு கிடைக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் அறிமுகமாக உள்ள, இந்த வாகனத்துக்கான, ‘புக்கிங்’ தற்போது துவங்கியுள்ளது. ஆரம்ப நிலை கார்களில், இதுதான் பெரியது என்பது சிறப்பு. இதற்காக, ரெனோ நிறுவன விற்பனையகங்களில், ‘லைவ் வீடியோ டெமோ’வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர, போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிட்டு, இதன் முக்கிய அம்சங்களை விளக்கும், ‘மொபைல் போன் ஆப்’ ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் உயரம், தரையில் இருந்து, 180 மி.மீ., என்பதால், மேடு, பள்ளங்களை கடக்கும்போது, காரின் முன்பகுதி அடிபடாது.
பின்புறத்தில் பொருட்கள் வைக்க, விசாலமான, 300 லிட்டர் ‘பூட்’, ஏழு அங்குல அகலமுடைய திசைகாட்டும், ‘இன்போடெயின்மென்ட் தொடுதிரை’ மற்றும், டேஷ்போர்டில், ‘டிஜிட்டல் கிளஸ்டர்’ என, பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|