பதிவு செய்த நாள்
19 செப்2015
15:28
டி.வி.எஸ்., நிறுவன தயாரிப்புகளில், பிரபலமான, ‘அப்பாச்சி’ பைக்கின், மேம்படுத்தப்பட்ட புதிய, 200 சி.சி., மாடல், நவம்பரில், அறிமுகமாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘அப்பாச்சி பைக்கின், 200 சி.சி., மாடல் உட்பட, மூன்று புதிய வாகனங்கள், ஆறு மாதங்களுக்குள், அறிமுகப்படுத்தப்படும்’ என, டி.வி.எஸ்., குழும தலைவர், வேணு சீனிவாசன் கூறியிருந்தார். சமீபத்தில், டி.வி.எஸ்., நிறுவனத்தின் புதிய பைக், சாலைகளில், சோதனை ஓட்டத்தில் இருந்ததை காண முடிந்தது.
அது, தற்போதைய, ‘அப்பாச்சி’யின், மேம்படுத்தப்பட்ட மாடல் என்பதை, சட்டென்று அடையாளம் காண முடிந்ததாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால், புதிய அப்பாச்சி பைக், நவம்பரில் அறிமுகம் செய்யப்படலாம். இதில், ‘ஆன்ட்டி பிரேக் லாக்’ வசதி செய்யப்பட்ட மாடலின் விலை, ஒரு லட்சம் ரூபாயில் இருந்து துவங்கக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக, வரும், வரும் என, எதிர்பார்த்த, அதிக திறனுடைய அப்பாச்சி, ஒருவழியாக அறிமுகமாக இருப்பது, அதன் ரசிகர்களுக்கு, இனிப்பான செய்தி தான்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|