பதிவு செய்த நாள்
28 செப்2015
13:38

மஹிந்திரா நிறுவனத்தின், முதல் பிரீமியம் பைக்கான, ‘மோஜோ’ அக்., 16-ல் அறிமுகமாகிறது. இந்த பைக், இருசக்கர வாகன விற்பனையில், நிலையான இடத்தை பெற உதவும் என, அந்நிறுவனம் நம்புகிறது.
மஹிந்திரா, தன் கார் மற்றும் ஜீப்களுக்கான, சில தொழில்நுட்ப உதவிகளை, பிரான்சில் உள்ள, ‘பியூஜியாட்’ நிறுவனத்திடம் பெறுகிறது. மோஜோவிலும், பிரான்ஸ் கைவண்ணம் இருக்கும்.
இதில், ஸ்பீடோ மீட்டர் டிஜிட்டலிலும், டேக்கோ மீட்டர் வழக்கமான முறையிலும் உள்ளன. ‘யு.எஸ்.டி., போர்க்’ மற்றும் பெரிய அளவிலான டயர்கள் என, பல அம்சங்கள் உள்ளன. ஆறு கியர்களை உடைய மோஜோ பைக்கில், 27 குதிரை திறனுடைய, 4 ஸ்டிரோக்- லிக்விட் கூல்ட் இன்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது; இது, ‘கே.டி.எம்., 200 டியூக், ஹோண்டாவின், சி.பி.ஆர்., 250ஆர், பஜாஜ் பல்சரின், ஏ.எஸ்., 200’ போன்றவற்றுக்கு, போட்டியாக அமையும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|