பதிவு செய்த நாள்
28 செப்2015
16:44

மும்பை : வாரத்தின் துவக்கநாளில் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. கடந்த சில மாதங்களாகவே பணவீக்கம் தொடர்ந்து சரிந்துள்ளது. இதன்காரணமாக வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மீதான எதிர்பார்ப்பால் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததன் காரணமாக இன்றைய வர்த்தகம் சரிவுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 246.66 புள்ளிகள் சரிந்து 25,616.84-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 72.80 புள்ளிகள் சரிந்து 7,795.70-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில், 1149 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 1579 நிறுவன பங்குகள் சரிந்தும், 127 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.
குறிப்பாக டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, இன்போசிஸ், கோல் இந்தியா, அல்ட்ரா டெக் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 3 முதல் 6 சதவீதம் வரை சரிந்தன. அதேசமயம், டாக்டர் ரெட்டி 5.5 சதவீதமும், யெஸ் வங்கி, இந்துஸ்தான் லிமிட்., உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்வுடனும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|