பதிவு செய்த நாள்
29 செப்2015
13:11

அமெரிக்காவில், போக்ஸ்வேகன் நிறுவன கார்களில், புகை மாசு அளவை குறைவாகக் காட்டும் சாப்ட்வேரை பயன்படுத்தி, மோசடி செய்திருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதால், மற்ற நிறுவனங்கள், எச்சரிக்கை அடைந்துள்ளன. அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட, 47 லட்சம் ‘சொனாட்டா’ ரக கார்களில், ‘கிராங்க் ஷாப்ட்’ பாகத்தில் கோளாறு இருக்கலாம் என, ஹுண்டாய் நிறுவனம் சந்தேகிக்கிறது.
குறிப்பாக, 2011 – 2012ம் ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்ட, 2 -லிட்டர் அல்லது 2.4- லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வகை கார்களில், ‘கிராங்க் ஷாப்ட்’களில், சில உலோக கழிவுகள், ஒட்டியிருக்கக் கூடும் என்றும், அது நீக்கப்படாவிட்டால், கார் திடீரென நின்று, விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனால், இலவசமாக பழுது நீக்கவும், ‘இன்ஜின் வாரண்டி’ காலத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு அதிகரிக்கவும், ஹுண்டாய் முடிவெடுத்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|