பதிவு செய்த நாள்
02 அக்2015
18:58
போக்ஸ்வேகன் கார்களில் துவங்கிய, புகை பிரச்னை, தற்போது, அந்நிறுவனத்தின் மற்ற தயாரிப்பு கார்களிலும் இருப்பது தெரிய வந்துள்ளது. போக்ஸ்வேகன் நிறுவனம், சில மாடல் கார்களை, முதன் முறையாக புகை பரிசோதனை செய்யும் போது மட்டும், புகை வெளியீடு அளவை குறைத்து காட்டும் வகையில், சாப்ட்வேர் பொருத்தப்பட்டிருந்தது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, 1.1 கோடி கார்களில், அதை பொருத்தியிருப்பதை அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது. அதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான, ஆடி வகையைச் சேர்ந்த, 21 லட்சம் கார்களிலும், அப்பிரச்னை இருப்பது தெரிய வந்தது. இதுபோதாதென்று தற்போது, போக்ஸ்வேகனின், அங்கமான, ‘ஸ்கோடா’ கார்களிலும், அந்த குளறுபடியான சாப்ட்வேர் பொருத்தப்பட்டிருப்பதை அந்நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. போக்ஸ்வேகனுக்கு பெரும் சோதனைக் காலம் தான்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|