பதிவு செய்த நாள்
06 அக்2015
12:05

வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்ற, ‘ஸ்விப்ட்’ காரை, பண்டிகை நேர விற்பனைக்காக சற்று மேம்படுத்தி, சிறிய மாற்றங்களுடன், மாருதி சுசூகி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய காரில், புறத்தோற்றம் மற்றும் உட்புறத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணம், ஒருசேர கண்ணை கவரும் வகையில், புறத்தோற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரேஸ் காரில் உள்ளது போல, கார் கூரை, ‘பான்னட்’ ஆகியவற்றில், வெள்ளை நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. நீள்வாக்கில் கருமை நிறத்திலான பெட்டி போன்ற டிசைன் உள்ளது. காரின் உட்புற இருக்கைகள், கறுப்பு மற்றும் சிவப்பு நிற கலப்பில் பொருத்தப்பட்டுள்ளன. எனினும், ஸ்விப்ட் காரில், நீள்வாக்கிலான பெட்டி வடிவில், ‘ஸ்டீயரிங்’ மீது காணப்படும், ‘ஆடியோ கன்ட்ரோல்’ வசதி இதில் இல்லை.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|