பதிவு செய்த நாள்
09 அக்2015
12:55
சமீபத்தில், ‘ரெனோ’ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள, ‘க்விட்’ கார், வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிறிய கார் பிரிவில், மற்ற நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை, க்விட் ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், மாருதி சுசூகி நிறுவனம், தன் சிறிய ரக, ‘ஆல்டோ கே10’ காரில், சில மாற்றங்களை செய்து, ஸ்டைலான தோற்றம் மற்றும் புதிய அம்சங்களுடன் கூடிய, ‘ஆல்டோ கே10 அர்பனோ’ என்ற பெயரில், மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விற்பனை, குறுகிய காலத்துக்கு மட்டுமே.
புதிய காரில், ‘ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஹேண்ட்ஸ் பிரீ புளூடூத் கிட், லெதர் சீட் கவர், வோல்டேஜ்’ மற்றும் கதவை திறக்கும் கைப்பிடி, சீதோஷ்ண நிலை குறித்த தகவல்களை தெரிவிக்கும், ‘யு.எஸ்.பி., சார்ஜர்’ உடன், ‘டெயில்’ மற்றும், ‘பாக் லேம்ப்’ போன்றவற்றில், எல்.இ.டி., விளக்குகள் என, பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அர்பனோ கார், நான்கு பிரிவுகளில் கிடைக்கிறது; சி.என்.ஜி., மாடலிலும் கிடைக்கிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|