பதிவு செய்த நாள்
24 அக்2015
17:51
இத்தாலியைச் சேர்ந்த, பிரபல சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவனமான, டி.எஸ்.கே., பெனெல்லி, குறுகிய கால விற்பனையாக, ‘டிஎன்டி 600ஐ’ பைக்கை பிரத்யேகமாக, தங்க நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது.
மிகவும் சக்தி வாய்ந்ததும், அந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் மிகப் பிரசித்தி பெற்றதுமான, டிஎன்டி 600 பைக், இந்திய சந்தையில், பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, சாலையில் போவோரின் கவனத்தை ஈர்க்க விரும்பும், பைக் பிரியர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகை யில், இந்த பைக்கை தங்க நிறத்தில், குறுகிய கால விற்பனைக்காக, சந்தையில் களம் இறக்கியுள்ளது. இது, சென்னையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதன், 600 சி.சி., நான்கு சிலிண்டர் இன்ஜின், 87.5 குதிரைசக்தி திறனை உருவாக்கக் கூடியது. சென்னையில், இதன் ஷோரூம் விலை, 5.68 லட்சம் ரூபாய்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|