பதிவு செய்த நாள்
28 அக்2015
15:28

பண்டிகை காலத்தையொட்டி, மஹிந்திரா நிறுவனம், ‘கஸ்டோ’ மொபெட்டில் சில மாற்றங்களை செய்து, சிறப்பு விற்பனைக்காக சந்தையில் அறிமுகப்படுத்திஉள்ளது. புதிய கஸ்டோ மொபெட்டில், தொழில்நுட்ப ரீதியாக மாற்றங்கள் இல்லை. அதனால், 8 குதிரை திறனை உற்பத்தி செய்யும் அதன், 109 சி.சி., இன்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அதன் வண்ணங்களில் மட்டும் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இரு நிறங்கள் கலந்த, ‘டூவல்’ வண்ணத்தில், புதிய கஸ்டோ கிடைக்கிறது. இது, ‘கஸ்டோ வி.எக்ஸ்.,’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை வாங்குவோருக்கு, ஓராண்டுக்கு இலவச இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. இதன் ஷோரூம் விலை, 49 ஆயிரத்து, 350 ரூபாயில் இருந்து துவங்குகிறது. கஸ்டோ மொபட், ‘ஹோண்டா ஆக்டிவா, டி.வி.எஸ்., ஜூபிட்டர்’ ஸ்கூட்டர்களுடன் போட்டி போடுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|