பதிவு செய்த நாள்
28 அக்2015
17:27

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவுடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு, முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் வர்த்தகம் துவங்கும்போதே சரிவுடன் ஆரம்பித்த பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவுடனேயே முடிந்தன. மேலும் வட்டி விகிதம் தொடர்பாக பெடரல் வங்கி மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கை மீதான எதிர்பார்ப்பாலும் பங்குவர்த்தகம் சரிவுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 213.68 புள்ளிகள் சரிந்து 27,039.76-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 61.70 புள்ளிகள் சரிந்து 8,171.20-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 19 நிறுவன பங்குகள் சரிந்தும், 11 நிறுவன பங்குகள் உயர்ந்தும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|