பதிவு செய்த நாள்
30 அக்2015
15:11

டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் விற்பனை, செப்டம்பருடன் முடிந்த இரண்டாவது காலாண்டில், 2,881 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய காலாண்டில் விற்பனை, 2,667 கோடி ரூபாய்; அதாவது, 2 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல, வருவாய், 8 சதவீதமும், வரிக்கு பிந்தைய வருமானம், 23 சதவீதமும் உயர்ந்துள்ளது.
இருப்பினும், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், 6.48 லட்சமாக இருந்த, இருசக்கர வாகனங்களின் மொத்த விற்பனை, 6.46 லட்சமாக குறைந்துள்ளது. அதற்கு மாறாக, 1.95 லட்சமாக இருந்த, டி.வி.எஸ்., ஸ்கூட்டர்கள் விற்பனை, 2.18 லட்சமாக அதிகரித்து, அந்நிறுவனத்துக்கு தெம்பை அளித்துள்ளது.
பைக் விற்பனை கடந்த ஆண்டைப் போலவே, 2.55 லட்சம் என்ற அளவிலேயே உள்ளது. அதில், எந்த மாற்றமும் இல்லை. மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை, 27 ஆயிரத்து, 946ல் இருந்து, 32 ஆயிரத்து, 922 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|