பதிவு செய்த நாள்
30 அக்2015
15:12

‘ஹீரோ மோட்டார் கார்ப்’ நிறுவனம், ‘டூயட்’ என்ற ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது. ‘மெட்டல் பாடி’ மற்றும் பக்கவாட்டில், அமைந்துள்ள, ‘குரோம்’ கோடுகள், இதற்கு அழகு சேர்ப்பதாக உள்ளன. இதில், பெட்ரோல் நிரப்பும் வசதி, வெளிப்புறத்தில் அமைந்திருப்பதால், எரிபொருள் நிரப்புவதில் சிரமம் இருக்காது.
டூயட் ஸ்கூட்டரில், பின்புற இருக்கை சற்று அகலமாக உள்ளது. பொருள் வைக்கப்படும் இடத்தில் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர, மொபைல் போன் சார்ஜ் செய்யும் வசதி, இரு ஹெல்மெட்களை வைக்கும் வகையிலான, ‘ஹோல்டர்’ ஆகியவையும் உள்ளன.
இந்த ஸ்கூட்டரில், 111 சி.சி., சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, ‘பிளாக் மெட்டாலிக், நேச்சர் கிரீன் மெட்டாலிக், மேட் வெர்னியர் கிரே, கிரேஸ் கிரே மெட்டாலிக், பிளேசிங் ரெட், சில்வர் ஒயிட்’ ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இதன், ஷோரூம் விலை, 48,400 ரூபாயில் இருந்து துவங்குகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|