பதிவு செய்த நாள்
30 அக்2015
15:12

பண்டிகை காலத்தையொட்டி, ‘போர்டு இந்தியா’ நிறுவனம், சென்னை, பெங்களூரு, டில்லி, கொச்சி மற்றும் ஐதராபாத் உட்பட, 17 இடங்களில் உள்ள விற்பனையகங்களில், கடனுதவி மூலம் வாகனங்கள் வாங்க, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட, ‘இகோஸ்போர்டு’ எஸ்.யு.வி., வாகனத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக, இந்த சிறப்பு கடனுதவி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, இகோஸ்போர்டு வாகனம் வாங்குவோர், ஆண்டுக்கு, 8.99 சதவீதம் வட்டி வீதத்தில், ஐந்து ஆண்டுகளில், கடன் தொகையை திருப்பிச் செலுத்தலாம். ‘‘இகோஸ்போர்டு கடனுதவி, ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. இதுபோல், போர்டு நிறுவனத்தின் பல தயாரிப்புகளுக்கு கடனுதவி வழங்கப்படும்,’’ என, ‘போர்டு கிரெடிட் இந்தியா’ நிர்வாக இயக்குனர், மார்க் கான்ஸ்டபிள் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|