பதிவு செய்த நாள்
30 அக்2015
18:25

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக, இந்தவாரம் முழுக்க சரிவை சந்தித்துள்ளன. கடந்த நான்கு நாட்களாக சரிவில் இருந்த பங்குவர்த்தகம் ஐந்தாம் நாளான இன்று உயர்வுடன் ஆரம்பமாகின. ஆனால் மதியத்திற்கு மேல் பங்குவர்த்தகம் மீண்டும் சரிய தொடங்கின. முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததாலும், முக்கிய நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தாலும் இன்றைய வர்த்தகம் சரிவை சந்தித்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 181.31 புள்ளிகள் சரிந்து 26,656.83-ஆகவும், நிப்டி 45.95 புள்ளிகள் சரிந்து 8,065.80-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பெல், பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. குறிப்பாக எல் அண்ட் டி நிறுவன பங்குகள் 4.11 சதவீதம் சரிந்தது. என்டிபிசி., ஐசிஐசிஐ., டாக்டர் ரெட்டி உள்ளிட்ட பங்குகள் லாபம் பெற்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|