பதிவு செய்த நாள்
04 நவ2015
14:47
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனும், துடிப்பான பேட்ஸ்மேனுமான விராட் கோலிக்கு, அவரது காதலியும், ‘பாலிவுட்’ நடிகையுமான அனுஷ்கா சர்மாவுக்கு அடுத்து, மிக அதிகமாக பிடித்தது, ‘ஆடி’ நிறுவன காராகத் தான் இருக்கும் போலிருக்கிறது. அவர், ஏற்கனவே மூன்று ஆடி கார்களை வாங்கி உள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன், டில்லியில் உள்ள ஆடி கார் ஷோரூமிற்கு, அரைக்கால் சட்டையுடன் திடீரென வந்த விராட் கோலி, வந்த வேகத்தில், ‘ஆடி ஏ8எல் டபிள்யூ 122’ மாடல் காரை வாங்க விருப்பம் தெரிவித்தார். அதில், 3.0 -லிட்டர் வி6 டீசல், 4.2 -லிட்டர் வி8 டீசல், 6.3 லிட்டர் டபிள்யு 12 பெட்ரோல் ஆகிய, மூன்று மாடல்கள் உள்ளன. அவற்றுள் விலை அதிகமான, 12 லிட்டர் பெட்ரோல் ரக காரை வாங்கினார், விராட். டில்லியில் அதன் விலை, 2 கோடி ரூபாய்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|