பதிவு செய்த நாள்
04 நவ2015
16:25

மும்பை : பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமான நிலையில் சரிவுடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கின. ஆனால் அதன்பின்னர் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க தொடங்கியதால் பங்குச்சந்தைகள் சரிய தொடங்கி, இறுதியில் சரிவுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 37.67 புள்ளிகள் சரிந்து 26,552.92-ஆகவும், நிப்டி 2050 புள்ளிகள் சரிந்து 8,040.20-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் 1469 பங்குகள் சரிந்தும், 1255 பங்குகள் உயர்ந்தும், 134 பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன. குறிப்பாக டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, கோல் இந்தியா போன்ற பங்குகள் உயர்வுடனும், ரிலையன்ஸ், சன்பார்மா, ஐசிஐசிஐ., பங்குகள் சரிந்தும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|