பதிவு செய்த நாள்
19 நவ2015
13:04

ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், ‘கிராண்ட் ஐ10’ மற்றும் ‘எக்ஸென்ட்’ ரக கார்களில், ‘கம்ப்ரெஸ்ட் நேச்சுரல் காஸ்’ எனப்படும் சி.என்.ஜி., எரிபொருளில் இயங்கக்கூடிய, ‘கிட்’டை பொருத்தி, அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் மாடல் கார்களில் மட்டும் இது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதில், டி.இ.டி.எஸ்.டி., என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சி.என்.ஜி., எரிபொருள் தீர்ந்து விட்டால், ஓட்டுனர் உடனே, பெட்ரோலுக்கு மாற்றிக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இது, டீசல் மாடல் காரை போலவே லிட்டருக்கு, 24 கி.மீ., ‘மைலேஜ்’ தருகிறது. கிராண்ட் ஐ 10 காரின், ‘டாப்’ மாடலான, ‘ஆஸ்டா ஏடி’யின், டில்லி நகர ஷோரூம் விலை, 7.94 லட்சம் ரூபாயில் துவங்குகிறது. ‘எக்ஸென்ட் காரின் டாப் மாடலான, சி.என்.ஜி., எக்ஸென்ட் விலை, 8.35 லட்சம் ரூபாயில் துவங்குகிறது. அனைத்து ஹுண்டாய் டீலர்களிடம் இந்த கார்கள் கிடைக்கும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|