பதிவு செய்த நாள்
20 நவ2015
15:08
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுசூகி, ‘ஸ்மார்ட் ஹைப்ரிட்’ தொழில்நுட்பத்துடன் கூடிய, மேம்படுத்தப்பட்ட, ‘எர்டிகா’ பன்முக பயன்பாட்டு வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில், பல தொழில்நுட்பங்களும், சிறப்பம்சங்களும் நிறைந்துள்ளன. இதன் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம், மேம்பட்ட எரிபொருள் சிக்கனத்தைத் தரும். டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட எர்டிகா, லிட்டருக்கு, 24.52 கி.மீ., ‘மைலேஜ்’ தருகிறது. இது வழக்கத்தை விட, 18 சதவீதம் கூடுதல். இதுபோல், பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட எர்டிகா, லிட்டருக்கு, 17.5 கி.மீ., மைலேஜ் தருகிறது. இது, 9 சதவீதம் கூடுதல்.
காரின் உட்புறத்தில், ‘ஸ்மார்ட்’ தொடுதிரை திசைகாட்டும் அமைப்பு இடம் பெற்றுள்ளது. மாருதியின் படைப்பில் சுற்றுச்சூழலுக்கு உகந்த, இரண்டாவது படைப்பான இந்த பன்முக பயன்பாட்டு வாகனம், பாதுகாப்பான அம்சங்கள் பலவற்றை கொண்டுள்ளது. பல்வேறு வகை மற்றும் வண்ணங்களில் கிடைக்கும் எர்டிகா, வாடிக்கையாளர்களின் மனதை கவரும் என்பது உறுதி!
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|